கணித அறிவியல் தமிழ் இதழ்

சமூகத்திற்கான கணித அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி சூலை – 2023 (Out Reach Program 2023)

   இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் கீழ் செயல்படும் கணிதவாணி கணித அறிவியல் கழகம் மற்றும் கோவை தொழில்நுட்பக் கல்லூரியின் கணிதவியல் துறை, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து “சமூகத்திற்கான கணிதம்” என்னும் தலைப்பில் கணித அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை 13.07.2023 அன்று வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

         இந்நிகழ்ச்சியில் OTP எண்களுக்குப் பின்னால் என்ன கணிதம் உள்ளது?, சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக உள்ள பொழுது எந்த கணித முறையைப் பின்பற்றி நெரிசலைத் தவிர்க்கலாம்? நிலநடுக்கம் ஏற்படுவதில் உள்ள கணிதப் பின்னணி என்ன? இது போன்ற சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் கணிதத்தின் பயன்பாடுகள் எந்த அளவில் உள்ளது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்திய அரசின் மூத்த விஞ்ஞானிகள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் எனப் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கணிதம் தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தனர்.

        The Kanithavaani Mathematical Science Society, Department of Science and Technology of the Government of India and the Department of Mathematics of the Coimbatore Institute of Technology and the National Service Scheme jointly organized a Mathematical Science Awareness program on the topic "Mathematics for Society" on Thursday 13.07.2023 at 4 pm at the Coimbatore Institute of Technology.

       What is the math behind the OTP numbers in this event? When the roads are heavily congested, which math can be followed to avoid congestion? What is the mathematical background of earthquake occurrence? The extent to which mathematics has applications in such social phenomena is discussed in detail. Senior scientists of the Government of India participated and highlighted it. In this event, many school and college students and general public participated with interest and listened to explanations related to mathematics.

சர்வதேச காகிதப்பை விழிப்புணர்வு நாள் Paper Bag Awareness Day 2023

கணிதவாணி கணித அறிவியல் கழகம் மற்றும் கோவை தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாகக் காகிதப் பை நாள் கடந்த ஜூலை 12 ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காகிதப்பை பயன்படுத்துவதின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு பொது மக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இலவசமாகக் காகிதப்பைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், அலுவலர்கள், கணிதவாணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Kanithavaani Mathematical Society, National Service Scheme Coimbatore Institute of Technology jointly organized National Paper Bag Day awareness programme on 12 th July 2023. In this program, awareness about the importance of using paper bags was highlighted among the general public. Paper bags were also provided free of cost to the public. In this event, many students, officers, Mathematics faculty members and general public participated in the event.

சர்வதேச யோகா தினம் International Yoga Day 2023

கணிதவாணி கணித அறிவியல் கழகம் மற்றும் கோவை தொழில் நுட்பக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரு சித்த ஸ்ரீஈசன் குருஜி, நிறுவனர் ஓம்கார தியான பீடம், ருதம்பரா அறக்கட்டளை அவர்கள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்வதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், கணிதவாணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Kanithavaani Mathematical Society, National Service Scheme Coimbatore Institute of Technology jointly organized International Yoga Day Celebration. Mr. Siddha Sreesan Guruji, Founder, Omkara Dhyana Peedham, Rudambara Trust attended and delivered an awareness talk on the benefits of practicing yoga. College professors, National Welfare Program Officers, Mathematics Administrators and public attended the event and graced the occasion.

சீருடைகள் வழங்கும் விழா

கணிதவாணி கணித அறிவியல் கழகம், கோவை தொழில் நுட்பக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் கோயமுத்தூர் பில்டர்ஸ் அண்ட் கான்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அங்கு செயல் படும் அங்கண் வாடியில் பயிலும் 50 குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

50 children studying in Angan Wadi were given free colored uniforms in a ceremony held at Muthukaundan Puthur Panchayat Union Middle School on behalf of Kanithavaani Mathematical Society, National Service Scheme, Coimbatore Institute of Technology, Coimbatore Builders and Contractors Association.

ஆசிரியர், கணிதவாணி,

165 / A1, ஸ்ரீபதி நகர் விரிவாக்கம்,

முதல் வீதி, நஞ்சுண்டாபுரம்,

கோயமுத்தூர் - 641036.