கணித அறிவியல் தமிழ் இதழ்

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்.

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்”

நாம் தாய்மொழியில் அறிவியலைக் கற்பிக்க வேண்டும்.

இல்லையெனில், விஞ்ஞானம் ஒரு உயர் செயல்பாடாக மாறும்.

இது அனைத்து மக்களும் பங்கேற்கக்கூடிய ஒரு செயலாக இருக்காது.

           “புத்தம்புதிய மேன்மை கலைகள் சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை” என்று எந்த பேதை உரைத்தான் என்று மகாகவி பாரதியார் அன்றே கோபப்பட்டு “எட்டுத்திக்கும் செல்வீர் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று நமக்கு ஆணையிட்டார்.

         அவரது ஆணை மற்றும் ஆசைக்கிணங்க, மதிப்பெண்களுக்காகப் போராடும் இந்த சமூகத்தினை கணிதம் மற்றும் அறிவியலில் ஒரு மதிப்புமிக்க சமூகமாக மாற்றும் முயற்சியாக இந்த கணிதவாணி கணித அறிவியல் தமிழ் இதழானது மாணவர்களுக்குக் கணிதம் மற்றும் அறிவியல் கருத்துக்களைத் தமிழ் மொழியில் எளிய வகையில் கொண்டு சேர்ப்பதினை முதன்மை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.

படைப்புகள் வரவேற்பு

  • கணிதவாணியில் வெளியிட கணிதம் மற்றும் அறிவியல் பற்றிய கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நகைச்சுவைகள் மற்றும் புதுவகையான விளக்க உரைகள் போன்ற பலவகையான வடிவத்தில் கருத்துப் படைப்புகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

  • தங்களுடைய படைப்புகள் அனைத்தும் தங்களுக்கு சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.

  • படைப்புகளில் வரும் பெயர்களும், சம்பவங்களும் கற்பனையாக யாரையும் தொடர்பு படுத்துபவையாக இருத்தல் கூடாது.

  • படைப்புகளை சுருக்கவும், திருத்தவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.

  • தங்களுடைய படைப்புகளை அனுப்பும் போது தங்களுடைய பெயர், புகைப்படம் (விரும்பினால்) மற்றும் முழு முகவரியையும் சேர்த்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  • தங்களது மேலான படைப்புகளை இதிழில் வெளியிட விரும்பினால் kanithavaani@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.